
மனைவியை பற்றி
கவிதைகள் ஏன்டா
எழுத மாட்ற என்றாள்
தோழியொருத்தி
கோபம் கொள்ளும்
எப்போதும்
குறை மட்டுமே சொல்லும்
மனைவி
இராட்சசியாக தான் தெரிகிறாள்
அது கற்பனை என்று தெரிந்தாலும்
நிழல் உலகம் என்று புரிந்தாலும்
நிம்மதி தரும்
அந்த கானல் வன காதலி
தேவதையாக தான் தெரிகிறாள்.
உண்மை சுடும் என்பதால்
ஒரு சின்ன மௌனத்தை
உதிர்த்து விட்டு
கேள்வி கேட்ட தோழியிடம்
பதிலேதும் சொல்லாமல்
கடந்து சென்றேன்.
-லி.நௌஷாத் கான்-
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%