மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுக்க மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற மின் ஆய்வுத் துறை வேண்டுகோள்
Nov 30 2025
10
சென்னை: மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுக்க மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மின் ஆய்வுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மின் ஆய்வுத் துறையின் சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பருவமழை காலங்களில் பொதுமக்கள் பின்வரும் மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் மின் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்.
ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற, தரமான வயர்கள் மற்றும் மின்சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். ரெஃப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு 3 மின்சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
உடைந்த சுவிட்சுகளையும் பிளக்குகளையும் உடனே மாற்றிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் பழுதான மின்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. கேபிள் டிவி வயர்களை மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகே கொண்டு செல்லக்கூடாது.
மின்கம்பத்துக்காக போடப்பட்ட வயர் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடிக் கயிறு கட்டி துணிகளை கண்டிப்பாக காயவைக்கக் கூடாது. மின்கம்பத்திலோ, தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டக்கூடாது.
மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக்கிளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயல வேண்டாம்.
இடி அல்லது மின்னலின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?