மாப்பிள்ளை ‘தங்கம்'

மாப்பிள்ளை ‘தங்கம்'



-வி.கே.லக்ஷ்மிநாராயணன் 

22,22 ஏ, ராமகிருஷ்ணா நகர் மெயின் 

ரோடு, ராமகிருஷ்ணா நகர் 

போருர், சென்னை 600 116 

             

தலை தீபாவளிக்காக பெண் உமா மற்றும் மாப்பிள்ளை கிருஷ்ணாவும் இன் 

னும் இரண்டு நாளில் வருவதாக தகவல் வந்ததும் சந்தோஷப் படுவதற்கு 

பதிலாக விசனப்பட்டார் கோவிந்தன் .அதற்கு காரணம் இருந்தது. 


கல்யாணத்தின் போதுமாப்பிள்ளளைக்கு மூன்று சவரனில் மைனர் செயின் 

போடுவதாக வாக்களித்திருந்தார் கோவிந்தன். ஆனால் அப்படி போட முடிய வில்லை. நிதி பற்றாக்குறையே காரணம்.


கல்யாணம் முடிந்து முதலில் வருகிறது தீபாவளிப் பண்டிகை.மாப்பிள்ளையின் 

தந்தை ஈஸ்வரன் தீபாவளி சீராக அந்த மூன்று சவரன் செயினை போடச் சொ 

ல்லி கைப் பேசியில் கோவிந்தனிடம் கட் அண்ட் ரைட்டாகக் கூறிவிட ஆடிப் போ

னார் கோவிந்தன். தங்கம் விற்கிற விலையில் தன்னால் ஒரு குந்துமணி 

தங்கம் கூட வாங்க முடியாது என்பது நன்றாகவே தெரியும். அதை நினைத்து 

கவலையும் தோன்றியது. மனைவி யசோதா கணவரின் நிலைமையை நினைத்து அல்லலுற்றாள். பண்டிகை நல்லபடியாக முடிய வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொள்ளவும் செய்தாள் .


அன்று தலை தீபாவளிக்காக வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை கிருஷ்ணாவையும் 

மகள் உமாவையும் வாய் நிறைய கோவிந்தனும் யசோதாவும் வரவேற் றாலும்

உள்ளுக்குள் உதறலாக இருந்தது ! 


“ மாமா, அத்தை வணக்கம் “ கிருஷ்ணாவைத் தொடர்ந்து, உமாவும், “ எப்படி அப்பா இருக்கீங்க ? அம்மா நலமா ?” என சிரித்தபடி விசாரித்தவள் புருஷனுடன் உள்ளே நுழைந்தாள். 


ஆயிற்று. விடிந்தால் தீபாவளி. ஊர் முழுக்க புத்தாடை உடுத்தி, பட்டாஸ் கொளுத்தி மகிழ்வர். இங்கும் புத்தாடைகள் இருக்கின்றன. பட்டாஸும் உள்ளது . ஆனால் சீர் பொருளான மூணு சவரன் செயின்தான் இல்லை.இரவு சாப்பாட்டை முடித்து தன் அறை க்குள் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்ட கோவிந்தனுக்கு இப்படி சிந்தனை ஓடியது.


யசோதாவும் உமாவும் சமைலறையில் இருந்தனர் .


அப்போது கிருஷ்ணா அறைக்குள் நுழைந்து கோவிந்தன் எதிரில் போய் நின்று கொண்டான்.


“ மாமா, உங்கக் கிட்டே பேசணும் ..”என்றபடி எதிர் இருக்கையில் அமர்ந்து 

கொண்டான்.


திகிலோடு அவனையே கோவிந்தன் பார்த்துக் கொண்டிருக்க தொடர்ந்தான் கிருஷ்ணா.


“ தீபாவளிச் சீராக மூணு பவுன் தங்கச் செயினை சீராக உங்களைப் போடச்

சொன்னாரில்லையா எங்கப்பா ?” 


“ ………..” 


ஆனால் உங்களுட நிதி நிலைமை சரி யில்லை செயின் வாங்கிப்போடறது ரொம்பவும் சிரமம்னு உங்கப் பொண்ணு வருத்தத்தோடு சொன்னா..அதனால யோசிச்சுப் பார்த்து ஒரு முடிவு எடுத்தேன்….


“ நீங்கள் தவறாக எடுத்துக்க கூடாது .என்னன்னா லோன் போட்டு மூணு பவு 

ன்ல செயின் நான் வாங்கி வந்திருக்கேன். எங்கப்பாவுக்குத் தெரியாது .நீங்க அந்தச் செயினை உங்கள் சார்பில் தீபாவளிச் சீராக எனக்குப் போட்டுடுங்க மாமா ! “ தன் கையில் வைத்திருந்த செயின் அடங்கிய சின்ன பிளாஸ்டிக் டப்பாவை கிருஷ்ணா நீட்ட , பேச வார்த்தையின்றி நெகிழ்ச்சியில் கண்கள் பனிக்கப் பெற்றுக் கொண்டார் கோவிந்தன்.


“ மாப்பிள்ளே! தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கிடைச்ச மாதிரி… என் கெளரவ

த்த காப்பாத்திட்டீங்க ! எனக்கொரு பிள்ளை இல்லாத குறையையும் தீர்த்து 

வச்சுட்டீங்க. ரொம்ப நாளைக்கு நீங்க அமோகமா இருக்கணும்.” 


புன்சிரிப்போடு தன் இரு கரங்களை குவித்து வணங்கிவிட்டு எழுந்து கொ

ண்டான் கிருஷ்ணா. 


பெருங்கவலை நீங்கி அங்கே கொண்டாடப்பட தீபாவளி தயாராக இருந்தது.



…………………………………………………….

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%