முதல் பருவத் தேர்வு நிறைவு தண்டலை நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசும் பாராட்டும்

முதல் பருவத் தேர்வு நிறைவு தண்டலை நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசும் பாராட்டும்



தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க நடுநிலை மற்றும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் முதல் பருவத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது இதனைத் தொடர்ந்து அடுத்த ஒன்பது நாட்கள் முதல் பருவத்தேர்வு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல் பருவத்தேர்வு நிறைவு செய்யப்பட்டு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்த அனைத்து மாணவர்களுக்கும் முதல் மூன்று இடங்களை பெற்ற வெற்றியாளருக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டன பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் ஆலோசனையின் படி பட்டதாரி ஆசிரியர்கள் மு.சீனிவாசன், தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள் மாலதி, சரண்ராஜ் ,பிரதீபா ஆகியோர் மாணவர்களை உரிய முறையில் தேர்வு செய்து பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கி சிறப்பு செய்தனர். மாணவர்கள் மகிழ்ச்சியாக பரிசுகளை பெற்று விடுமுறை கொண்டாட ஆயத்தமாயினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%