ரூ.5 லட்சம் சொந்த செலவில் 50 சிசிடிவி கேமராக்களை பொறுத்திய தமாகா கவுன்சிலர்!

ரூ.5 லட்சம் சொந்த செலவில் 50 சிசிடிவி கேமராக்களை பொறுத்திய தமாகா கவுன்சிலர்!



திருப்புவனத்தில் தமாகா கவுன்சிலர் தனது சொந்த செலவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலான 50 சிசிடிவி கேமராக்களை 3 வார்டுகளில் பொருத்தினார்.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தமாகா தொண்டரணித் மாநிலத் தலைவரான பேரூராட்சி கவுன்சிலர் அயோத்தி தனது சொந்த செலவில் ரூ.5 லட்சத்தில் தமாகா கவுன்சிலர்கள் இருக்கும் 15, 5 மற்றும் 4 ஆகிய 3 வார்டுகளில் 50 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.


சந்தை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவற்றை நேற்று மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தொடங்கி வைத்தார். ஆய்வாளர் முத்துக்குமார், சார்பு ஆய்வாளர் பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதுகுறித்து அயோத்தி கூறுகையில், தொடர்ந்து நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதனை போக்க வார்டுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு செய்தேன். இதன் மூலம் சமூகவிரோதிகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது குறையும். முதலில் தமாகா கவுன்சிலர்கள் இருக்கும் 3 வார்டுகளில் பொருத்தியுள்ளேன். படிப்படியாக மற்ற வார்டுகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த உள்ளேன் என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%