வந்தவாசியில் கலைத் திருவிழா தொடக்கம்..

வந்தவாசியில் கலைத் திருவிழா தொடக்கம்..


வந்தவாசி, அக் 15:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா - 2025 தூய நெஞ்ச மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது. இதில் பாட்டு, நடனம், நாடகம், நாட்டுப்புற பாடல்கள், ஓவியம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தனித் திறன்களை 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் வெளிப்படுத்தினர். இந்த கலைத் திருவிழாவை நகர் மன்ற தலைவர் எச். ஜலால் தொடங்கி வைத்தார். வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், வட்டார வள மைய பயிற்றுநர் பார்த்திபன், பல்வேறு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%