அன்புடையீர்
வணக்கம். 5.10.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் ஜப்பானில் முதல் பெண் பிரதமராகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியாக படிக்க வைத்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக எனக்கு அமைந்தது பாராட்டுக்கள்.
அண்ணாமலையார் மலை கிரிவலம் என்ற செய்தியும் படமும் மிகவும் அருமை. ஆர்வமுடன் படிக்க வைத்த அந்த பக்கத்தில் வந்த அனைத்து ஆன்மிக தகவல்கள் அரசியல் தகவல்கள் எல்லாமே பிரமிப்புடன் படிக்க வைத்தது பாராட்டுக்கள்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் மாதுளை ஜூஸ் யார் யார் எல்லாம் குடிக்கக்கூடாது என்று மிகத் தெளிவாக சொன்னது பாராட்டுக்குரியது. சென்னை மெட்ரோவில் செப்டம்பர் மாதத்தில் 1.01 கோடி பேர் பயணம் செய்தார்கள் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தது.
நடிகர் விஜய் அவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்தது விஜய் பற்றி யோசிக்க வைத்தது. அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாக்க ஒரு கோடி செலவில் முன்னோடி திட்டங்கள் செய்வது மிகவும் அருமை. கடவுள் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் உலகத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப் பட்ட இது மிகவும் அருமையான செய்தி.
தினம் ஒரு தலைவர்கள் பகுதி ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாசமான தலைவர்களைப் பற்றி மிக அழகாக தெளிவாக வரலாற்று செய்தியாக சொல்வது அறிவுக்கு விருந்தாக அமைகிறது இன்று சரோஜினி நாயுடு அவர்களின் வரலாறும் புகைப்படமும் மிகவும் அருமை பாராட்டுக்கள்.
பல் சுவை களஞ்சியம் பகுதி பரவசமுடன் படித்து மகிழ்ந்து அதில் வரும் விடுகதைகள் மிகவும் அருமை. பாராட்டுக்கள். ஜோதிடம் அறிவோம் என்று ஜோதிடத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் மிகத் தெளிவாக சொல்வது படிக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. எந்த திசையில் துளசி செடி நட வேண்டும் என்ற செய்தி மிகவும் அருமையான தகவல் பாராட்டுக்கள்.
வள்ளலார் ராமலிங்க அடிகள் அவதாரத் திருநாள் என்ற செய்தியும் ராமலிங்க அடிகளாரின் படமும் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது பாராட்டுக்கள்.
ஞாயிறு என்றாலே மிக அருமையாக வரும் ராசிபலன்களை படித்து அன்றைய வாரத்தினை நன்றாக புரிந்து கொள்வேன். சுற்றுலா பக்கத்தில் வந்த தகவல்கள் மிகவும் அருமை சேகரித்து வருகிறேன்.
திருக்கோவில்கள் பயிற்சி பள்ளியில் பயின்று 108 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கிய இதை படித்தவுடன் பெருமையாக இருந்தது. க்ரைம் காரணம் மிகவும் அற்புதம் நல்ல தகவல்களை அழகாக சொல்வதால் ஒரு விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள உதவுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் மரணத்திற்கு இருமல் சிரப் காரணமா என்று 19 ஆலைகளில் ஆய்வு செய்து தீவிரமாக இந்த பணியை செய்தவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இதனால் இனி மற்ற குழந்தைகளாவது பாதுகாக்கப்படும் என்று எண்ண தோன்றியது.
எச் 1 பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக்கோரி அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த செய்தி அமெரிக்காவில் நடப்பதை கண்முன்னே கொண்டு வந்து காட்டியது. பிரதமர் மோடி அவர்கள் புத்திசாலியான தலைவர் என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டுவது உண்மையான தகவல் என்று மகிழ்ச்சியுடன் படித்தேன்.
அனைத்து பக்கங்களிலும் நல்ல அருமையான செய்திகளை கொடுத்து ஞாயிறு அன்றும் சுறுசுறுப்பாக இயங்க உதவிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்