வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 19.09.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 19.09.25


அன்புடையீர் ,


வணக்கம் 19.9.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் முதல் பக்கத்தில் ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை ஆதாரமற்றவை என்ற வார்த்தைகளை எல்லாம் படிக்கும் போது வடக்கே நடக்கும் அரசியல் கண்முன்னே தெரிகிறது. இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக எனக்கு அமைந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


திருக்குறளில் நல்ல பொருளுடன் சேர்த்து படிக்கும்போது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. தினம் அந்த சந்தோஷத்தை கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் மனமார்ந்த பாராட்டுக்கள். எஸ்.எஸ்.. துரைசாமி நாடார் மாரியம்மாள் கலைக் மற்றும் அறிவியல் கல்லூரி விழா படம் செய்தி மிகவும் அருமை பாராட்டுக்கள் .


டீ ஒரு உற்சாகமான பானம் அந்த திட்டியினை முப்பது நாட்கள் குடிக்காமல் இருந்தால் என்ன ஆகும் என்று நல்ல அருமையான தகவலை நலம் தரும் மருத்துவம் பகுதியில் சொன்னது பயனுள்ளது பாராட்டுக்கள்.


தமிழ்நாட்டில் அடுத்த மாதம் சிறப்பு வாக்காளர் திருத்த பணி தொடங்குவது தேர்தல் வரும் நேரத்தில் மிகவும் அருமை பாராட்டுக்கள் திருச்சியில் ரூபாய் 290 கோடியில் காமராஜர் நூலகம் என்பது அருமையான தகவல் பாராட்டுக்கள்.


தினம் ஒரு தலைவரும் புகழ் பகுதியில் வந்த அப்துல் கபூர் வரலாறு மிகவும் அருமை படத்துடன் படிக்கும்போது நல்ல வரலாற்றுச் செய்தியாக மனநிறைவை தந்தது.


.பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த சுதந்திரப் போராட்டம் பற்றிய அரிய தகவல்கள் மிகவும் அருமை. விடுகதை மிகவும் நன்றாக கண்டு பிடிக்கும்படி எளிதாகவும் இருந்தது பாராட்டுக்கள்.


தெய்வீக அருள் தரும் ஆன்மிகம் என்று அந்தப் பக்கத்தில் வந்த படங்களும் செய்திகளும் புல்லரிக்க வைத்தன. திருப்பதி கோவிலில் அங்கப் பிரதோஷம் டோக்கன் வழங்கும் நடைமுறையில் மாற்றம் என்ற செய்தி திருப்பதி சொல்பவர்களுக்கு பயனுள்ள தகவல் பாராட்டுக்கள்.


உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களை பெற்று தீர்வு கண்டுவதற்காக ஆணையை வழங்கினார் என்ற செய்தி மிகவும் அருமை பாராட்டுக்கள்.


சுற்றுலா பக்கத்தில் வந்த ஆந்திராவின் ஊட்டி என்று அரக்கு பள்ளத்தாக்கு பற்றிய செய்தி புதுமையாக இருந்தது. இந்த இடங்களுக்கெல்லாம் சென்று பார்க்க வேண்டும் ஒரு ஆவலை தூண்டும் செய்தியாக தருவது பாராட்டுக்குரியது..


புலிகளுக்கு ஆபத்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் மத்திய அரசு சிபிஐ உள்ளிட்டவற்றுக்கு நோட்டீஸ் என்ற செய்தி அதிர்ச்சியான தகவலாக இருந்தது .


ஒரு தொகுதியில் மட்டும் 6000 வாக்காளர்களின் நீக்க முயற்சி சான்றுகளுடன் ராகுல் காந்தி அவர்கள் குற்றம் சாட்டியதை படிக்கும் போது நான் பெங்களூருக்கே நேரில் சென்று பார்த்தது போல ஒரு பிரமிப்பையும் அதிர்ச்சியையும் உணர்ந்தேன்.


போதைப் பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் அறிவித்த செய்தி அதிர்ச்சியான தகவலாக இருந்தது.


வெளிச்சமான வெள்ளிக்கிழமை அழகாக விடிய தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் அலைப்பேசியில் வந்து விழ ஆனந்தத்துடன் எல்லா பக்கங்களையும் படித்து மகிழ்ந்தேன். இப்படி ஒரு அருமையான பணியினை தினமும் அக்கறையுடன் செய்யும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%