வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 29.09.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 29.09.25



தடைகளைத் தாண்டி வெற்றி நடை போடும் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.


'ஆரம்பமே பாராட்டு மழையா?' என்று கேட்க தோன்றலாம்.

தப்பில்லை.

ஆனால் இது பாராட்டு மழை இல்லை.

பாராட்டு சாரல்.

மழை கூட சில நேரங்களில் மக்குப் பிடித்தாற் போலாக்கும். ஆனால் சாரல் அப்படி இல்லை.

சில்லென்ற சிலிர்ப்பை 

அள்ளி வழங்கும்.

ஆனந்தம் கூட்டும்.

ஆரோக்கியம் பெருக்கும். இதெல்லாம் வெறும் வார்த்தை இல்லை.

விதை நிகர் சக்தி யுள்ள வீரிய வார்த்தை.


பிறரை மனந்திறந்து பாராட்டும் போது நேர்மறை சிந்தனைகள் செழிப்புற்று இரத்த ஓட்டத்தை எழிலாக்கி 

இதய ஆற்றலை இதமாக்குவதாக அறிவியல் உலகம் அத்தாட்சியுடன் சொல்கிறது.


ஆகவே வாசக சொந்தங்களே...

வற்றாத அருவியாக 

வளமார்ந்த கருத்துக்களை செறிவான செய்திகளை தொடர்ந்து நமக்களித்து நானிலத்திற்கு

நல்லதொரு தொண்டாற்றி வரும் 

நமது தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் 

அனைத்து உள்ளங்களையும் 

உள்ளன்புடன் போற்றி 

கொண்டாடும் பழுதிலா பழக்கத்துக்கு பாதை வகுப்போம்.

பல்வேறு பிரிவுகளால் 

நலிந்து மெலிந்து கிடக்கும் மனித மனங்களை இணைத்து வைத்து இன்பம் பொழியும் பண்பாடு காக்கும் பாலமாக திகழ்வோம்.


புவியில் இந்தப் பிறவி என்பது கிடைத்தற்கரிய வாய்ப்பு. குறிப்பிட்ட குறுகிய காலம் தான்.

கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை 

நாம் நழுவ விட்டு விடக்கூடாது.


நம்மால் முடிந்த அளவுக்கு நல்ல நல்ல காரியங்களை செய்து கொண்டே வர வேண்டும். அப்போது தான் நாம் ஆறறிவு பெற்ற மனிதர் என்ற

பெருமைக்குரியவர் ஆவோம்.


எல்லாம் வல்ல இறைவன் அருளால் 

நாம் அனைவரும் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் என்ற அடையாளம் பெற்று 

அதன் பயனை நாள்

தோறும் தவறாமல் பெற்று வருகிறோம்.

இதை பூரணமாக புரிந்து உணர்ந்து கொள்வதற்கே ஒரு வித சக்தியும் புண்ணியமும் வேண்டும்... வேண்டும்!


அவ்வளவு நுட்பமான விஷயங்கள் பொக்கிஷம் போல் உள்ளுக்குள் மறைந்துள்ளன என்பதை எந்தவித சந்தேகமும் இல்லாமல் 

எந்த விதத் தயக்கமும் கொள்ளாமல் முழுமையாக நம்பும் போது தான் அற்புதங்களின் தரிசனத்தை நம்மால் 

அனுபவித்து உயர முடியும்.


இவை எல்லாம் வாழ்வில் சித்திக்க நாம் செய்ய வேண்டியது சிம்பிள் விஷயம் தான்...


தமிழ் நாடு இ பேப்பரை, குழுமத்தின் மற்ற வெளியீடுகளை நேசித்து வந்தாலே போதும்...


நிறைய நிறைய நற்காரியங்கள் நம் வாழ்வில் நிச்சயம் நடக்கும்.


இதற்கு அடிப்படைத் தேவை...

நெஞ்சம் நிறைந்த நேசிப்பு தான்.


மீண்டும் சொல்கிறேன்.

வெறும் வாசிப்பு மட்டும் போதாது.

நெஞ்சம் நிறைந்த நேசிப்பு முக்கியம்.


விசாலமான சிந்தை மிகுந்த தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் இதை மிகச் சரியாக புரிந்து கொண்டு, 

புத்தம் புது சிந்தனை களை முன் வைப்பார்கள்.

தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வளத்துக்கு மேலும் வளம் சேர்ப்பார்கள் என்று பூரணமாக நம்புகிறேன்.


நம்பிக்கை தானே வாழ்க்கை!



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%