
தமிழ் நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
நமது இ பேப்பரில் தினசரி வெளிவரும்
நலம் தரும் மருத்துவம் பகுதியில் வெளிவரும்
பயனுள்ள தகவல்களை யெல்லாம் தவறாமல்
தொகுத்து குடும்ப ஃபைல் வரிசையில்
சேர்த்து விட்டோம்.
சின்ன சின்ன குறிப்புகள் தான்...
ஆனால் மொத்தமாக
வைத்துப் படிக்கும் போது புதையல்
பொக்கிஷமாக திகழ்கிறது.
எத்தனை எத்தனை தகவல் குறிப்புகள்.
நமது ஆரோக்கிய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் விதமாக இருக்கிறது என்பது தான் ஆச்சரியம்.
ஆனால் ஒன்று...
படித்தால் மட்டும் போதாது...சீரியஸாக
சின்சியராக உள் வாங்கி நடைமுறைப் படுத்தி வர வேண்டும் என்பது முக்கியம்.
வீட்டுக்கு வருகை தரும் உறவினர்களிடம்
நண்பர்களிடம் எடுத்துக் காட்டும் போது, அவர்கள் மகிழ்ச்சியால் முகம் மலர்கிறார்கள்.
தமிழ் நாடு இ பேப்பரின் சேவையை
மனமுவந்து பாராட்டி பரவசம் அடைகிறார்கள்.
தலைமை ஆசிரியர் அவர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் அன்பான வேண்டுகோள்:
நலம் தரும் மருத்துவம்
மற்றும் தினம் ஒரு தலைவர்கள்...
இந்த இரண்டு பகுதிகளின் தொகுப்பை நூலாக வெளியிட்டால், என்னைப் போன்ற வாசக சொந்தங்கள் பயன் அடைவார்கள்.
எப்போதும் வாசகர் நலனில் பெரிதும் கவனம் செலுத்தி வரும் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின்
சமூக நலன் சார்ந்த
பேருணர்வுக்கு ராயல் சல்யூட் மற்றும் நெஞ்சார்ந்த நன்றிகள்
பி.வெங்கடாசலபதி
தென்காசி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?