அன்புடையீர்
வணக்கம்.15 .9. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் முதல் பக்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 வது ஒன்றியமாக அஞ்செட்டி உதயம் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு மிகவும் அருமை. பாராட்டுக்கள் .இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு பல நல்ல செய்திகளை சொன்னது.
திருக்குறள் மிகவும் அருமை 381 நாட்களும் நல்ல திருக்குறளை பொருளுடன் கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுத்தது நல்ல தகவல் பாராட்டுக்கள் .
வேர்க்கடலை மிகவும் அற்புதமான சுவையான உணவு. ஆனால் அதை அதிகம் சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனை வருமா என்று ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு நல்ல தீர்வையும் சொன்ன நலம் தரும் மருத்துவம் பகுதிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
டெல்லி - மீரட் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்த தகவல் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் நல்ல தகவல் பாராட்டுக்கள் திருமலையில் காணாமல் போனவர்கள் கண்டறிய நவீன தொழில்நுட்பம் என்ற செய்தி மிகவும் அருமை பாராட்டுக்கள் .
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் மறை திருநாவுக்கரசு அவர்களின் வரலாறும் புகைப்படமும் மிகவும் அருமை. நல்ல அருமையான தலைவர்கள் பற்றி அறிந்து கொள்ளும் அருமையான பகுதியாக உணர்ந்து தினமும் அவளுடன் படிக்கிறேன்.
பல்சுவைக் களஞ்சியம் பகுதியில் வந்த பூண்டின் பிரமாதமான மருத்துவ குணங்கள் நல்ல தகவல். பாட்டில் தண்ணீர் அவ்வளவு சுகாதாரமானதல்ல என்பது உண்மைதான்.
என்று உணர்ந்து அந்த செய்தியை மனதில் நிறுத்திக் கொண்டேன்.
பன்முகம் பக்கத்தில் வந்த அனைத்து தகவல்களும் உன் அருமை காலை உணவு தவிர்த்தால் நீரழி நோய் வருமா என்ற கேள்வியும் அதற்கான தீர்வும் சொன்னது பாராட்டுக்கள் .
தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் மற்றும் அருள் தரும் தெய்வம் இதழ் சார்பாக பைரவர் வேள்வி மிகவும் அருமை படத்துடன் பார்க்கும் போது உடலும் உள்ளமும் புல்லரித்தது. நல்ல அருமையான ஆன்மீக செய்திகளை 16 - ம் பக்கத்தில் கொடுத்து ஆன்மீக சிந்தனை வளர்க்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
சுற்றுலா என்ற பகுதியில் வந்த இலவச ஆன்மீக பயணம் எப்படி விண்ணப்பிக்கலாம் என்று நல்ல தகவலை சொன்னது அருமை பாராட்டுக்கள்.
மகாராஷ்டிராவில் உள்ள கல்யாண் டோம்பி வலி நகரங்களில் ஒரே நாளில் 67 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது.
அசாமில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம் பூட்டானில் நில அதிர்வு என்ற செய்தி எல்லாம் அதிர்ச்சியுடன் படிக்க வைத்தது.
அமெரிக்காவை எதிர்கொள்ள தயார் வெனிசுலா ஜனாதிபதி அறிவிப்பு என்ற அயல்நாட்டு செய்திகளின் அழகாக கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பயணிகள் படகில் 193 பேர் பலி என்று செய்து அதிர்ச்சியாக இருந்தது.
தித்திக்கும் திங்கட்கிழமை நல்ல விடியலாக அழகான செய்திகளை அலைபேசியில் கொடுத்து உற்சாகமாக துவங்க வைத்த தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்