வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 21.09.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 21.09.25



தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் புதிய புதிய அறிவிப்புகள் பிரமிக்க வைக்கின்றன.


சமீபத்திய அறிவிப்பு:


இரு மனங்களை ஒருங்கிணைக்கும்

மகிழ்ச்சி மேடை...

மணமேடை...


விரைவில் மாத இதழாக மலர விருக்கும் மணமேடை 

பத்திரிக்கைக்கு நெஞ்சம் நிறைந்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!


'எடுத்த காரியம் யாவினும் வெற்றி' என்ற சொல்லாடலுக்கு 

பொருத்தமாய் கனகம்பீர ஜொலிப்போடு ஜெயக்கொடி நாட்டி வரும் தமிழ்நாடு இ பேப்பர் குழுமத்தின் 

அபார தன்னம்பிக்கை 

பிளஸ் அபார உழைப்பு 

நமக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி தருகிறது என்றால் இன்னொரு பக்கம் ஆச்சர்யத்தையும் வாழ்க்கை பாடத்தையும் நுட்பமாக கற்றுத் தருகிறது. இதை நாம் உணர்ந்து 

உளமாற பாராட்டி மகிழ்வதற்கும் விரிந்த உள்ளம் வேண்டும்.


இந்த தருணத்தில் வழக்கமாக நாம் பயன்படுத்தும் வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.


முடிந்தவன் சாதிக்கிறான்.

முடியாதவன் போதிக்கிறான்.


பலப்பல நெருக்கடிகளை சந்தித்த வண்ணம் இருக்கும் இன்றைய பத்திரிகை உலகில் 

அடுத்தடுத்து புதுப்புது 

இதழ்களை வெளிக் கொண்டு வருவது என்பது மகா காரியம்.

அதற்கு தனித்துவம் மிளிரும் துணிச்சலும்

சுயநலம் நோக்கில்லாத சமூக நல உணர்வும் கண்டிப்பாக வேண்டும். இதைத் தாண்டி தளர்வோ சோர்வோ எட்டிப் பார்க்காத அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய உழைப்பு...


இந்த மூன்று முத்தான பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்றதால்

தான், தமிழ் நாடு இ பேப்பர் குழுமம், எல்லோரும் புருவம் உயர்த்தி வியக்கும் வண்ணம் சிறகடித்துப் பறந்து சரித்திரம் படைக்க முடிகிறது.


வாசக சொந்தங்கள் இதை நினைந்து நினைந்து பெருமிதம் கொள்ளலாம்.

பேருவகையும் அடையலாம்.


அத்தோடு நின்று விடவும் கூடாது.

நித்தம் நித்தம் இலவசமாக தமிழ் நாடு இ பேப்பரை வாசித்து, மன வளம் காணும் நாம், இந்த குழுமத்தின் சார்பாக 

ஏற்கனவே வெளிவந்து ஏகோபித்த பாராட்டை பெற்று வரும் அருள் தரும் தெய்வம் இதழுக்கு மேலும் மேலும் சந்தாதாரர் எண்ணிக்கையை கூட்டி வலுப்படுத்த வேண்டும்.


விரைவில் வெளிவர இருக்கும் மணமடை மாத இதழை நம் உறவுகளும் நட்புகளும் 

முழுமையாக பயன் படுத்திக் கொள்ளும் வகையில் இப்போதே 

நாம் அனைவரும் உவகை உள்ளத்தோடு 

களம் இறங்க வேண்டும்.


ஊருக்கு உழைத்தல் யோகம் என்பான் பாட்டு வேந்தன் பாரதி.

பிறருக்கு நாம் செய்கின்ற சின்னச் சின்ன உதவிகள் கூட 

பிழையே வராத பிரபஞ்ச கம்ப்யூட்டரில் பதிவாகி, துல்லிய கணக்கில் கண்டிப்பாக  

நமக்கோ நம் சந்ததியருக்கோ பிரதிபலன் வந்து சேரும். இது வெறும் வறட்டு வார்த்தை இல்லை. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட பேருண்மை.


ஆகவே அன்பான வாசக சொந்தங்களே!

தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக உறவுகள் என்ற அற்புதமான சங்கமத்தில் பெருமை கொள்வோம்.

செயற்கரிய காரியங்களால் களிப்பு கொள்வோம்.

பத்தோடு பதினொன்றாக இல்லாமல், புத்தம் புது 

சிந்தனைகளால் சிறப்பான சேவைகளால் வரலாறு படைப்போம்.

வசந்த வாழ்வை உறுதிப் படுத்துவோம்.



பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%