! வாட்ஸ்அப்பில் உங்கள் ஸ்டேட்டஸை அனைவரும் ஷேர் செய்யும் புதிய அம்சத்தை இந்தியப் பயனர்களுக்கு அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப்பில், முன்னதாக பயனர்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ்களை, யார் ஷேர் செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் கஸ்டமைஸ் செய்ய வேண்டி இருந்தது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘Share Status with Contacts’ என்ற புதிய அம்சத்தின் மூலம், உங்கள் ஸ்டேட்டஸை உங்கள் காண்டாக்ட் (My Contacts) லிஸ்ட்டில் உள்ள அனைவருக்கு எளிதாக ஷேர் செய்யும் வகையில் இதனை Default செட்டிங்காக மாற்றிக் கொள்ள முடியும். இந்த அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்பை திறந்து Status டேப்-க்கு சென்று ஸ்டேட்டஸை தயார் செய்து அதனை பதிவிடுவதற்கு முன்பு, “Status (Contacts)” or “My contacts / Contacts except … / Only share with …” என்ற ஆப்ஷனில் “My contacts” என்பதை தேர்வு செய்த பின்னர் Allow Sharing என்பதை Enable செய்து பதிவிட்டால், உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள அனைவரும் உங்கள் ஸ்டேட்டஸை ஷேர் செய்ய முடியும்.
கூகுள் ஏஐ மோட்-இல் சர்ச் லைவ் அம்சம்
! கூகுள் ஏஐ மோட்-இல் சர்ச் லைவ் (Search Live) மற்றும் 7 இந்திய மொழிகளில் தேடல் மேற்கொள்ளும் அம்சங்கள் இந்திய பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் ஏஐ மோட்-இன் சர்ச் லைவ் அம்சம் தற்போது படிப்படியாக இந்திய பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏஐ அம்சமானது, ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் மைக்கை பயன்படுத்தி கூகுள் தேடல்களை மேற்கொள்ளவும், தேடல்களை உரையாடல் மூலமாக மேற்கொள்ளவும் பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அம்சத்தை பயன்படுத்த, முதலில், கூகுள் செயலியை திறந்து, Search Bar-இல் ‘Live’ என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அல்லது கூகுள் லென்ஸ் செயலியில் ‘Live’ ஆப்ஷனை கிளிக் செய்தும் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். இது தவிர, கூகுள் ஏஐ மோட்-இல், பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 7 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?