
விரைவில் டீப் பேக் வீடியோக்களை கண்டறியும் க்ராக்
எக்ஸ் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட்டான க்ராக் (Grok)இல், டீப் ஃபேக் வீடியோக்களை கண்டறியும் புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில், டீப் ஃபேக் போன்ற போலியான வீடியோக்களை மற்றும் தவறான தகவல்கள் சுலபமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் .க்ராக் ஏஐ சாட்பாட்டில் சில மேம்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். புதிய மேம்படுத்தப்பட்ட க்ராக் ஏஐ, வீடியோ ஃபைல்களில் மறைமுகமாக இருக்கும் தொழில்நுட்ப அடையாளங்களான “AI Signatures” மற்றும் சிறிய குறைபாடுகளை ஆராய்ந்தும், அந்த வீடியோவை இணையத்தில் தேடி அதன் உண்மை தன்மையை கண்டறியும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?