விழுப்புரம் அஸ்வின்ஸ் சுவீட்ஸ் கிளையில் தீபாவளி சிறப்பு ‘கிப்ட் பேக்’ விற்பனை

விழுப்புரம் அஸ்வின்ஸ் சுவீட்ஸ் கிளையில் தீபாவளி சிறப்பு ‘கிப்ட் பேக்’ விற்பனை



விழுப்புரம், அக்.12-


விழுப்புரத்தில் அஸ்வின்ஸ் சுவீட்ஸ் கிளை அமைந்துள்ளது. இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிப்ட் பேக் சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சியில் விழுப்புரம் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத்தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அதை தொழில் அதிபர் ஏ.எஸ்.ஜி. கோபி பெற்றுக்கொண்டார். முண்டியம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜவேலு, அஸ்வின்ஸ் குழும விழுப்புரம் கிளை பொறுப்பாளர் முரளிதரன், கிளை நிர்வாகி வடிவுக்கரசி முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.


அஸ்வின்ஸ் சுவீட்ஸ் விழுப்புரம் கிளை பொறுப்பாளர் முரளிதரன் கூறியதாவது:


பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் 25-க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் அஸ்வின்ஸ் சுவீட்ஸ் கிளையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிப்ட் பேக் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.


இங்கு பட்சணங்கள் அழகான டின் கண்டைனரில் விற்கப்படுகிறது. இனிப்புகள் கிளாசிக் தீபாவளி கிப்ட் பேக் ரூ.450-க்கும், பலகார கிப்ட் பேக் ரூ.499-க்கும், டிலைட் கிப்ட் பேக் ரூ.900-க்கும், வி.ஐ.பி. டின் ரூ.1,000-க்கும், ப்ரீமியம் தீபாவளி பாக்ஸ் ரூ.1,250-க்கும் கிடைக்கும்.


இதுதவிர அசார்டட் ஸ்வீட்ஸ், காஜூ பக்லவாஸ், நெய் இனிப்புகள், ஸ்நாக்ஸ் மற்றும் சேவ்ரீஸ் ஆகியவை தனித்தனியே கிடைக்கிறது. அதுமட்டுமின்றி தட்டை, அச்சு முறுக்கு, மிக்சர், காராசேவு, காரா பூந்தி உள்ளிட்ட அனைத்து கார வகைகளும் பாரம்பரிய முறையில் பழமைமாறாமல் சுத்தமாகவும், சுவையாகவும் தயாரித்து தருகிறோம். தீபாவளி இனிப்புகளுக்கு ஆர்டர்கள் வரவேற்கப்படுகிறது என்று கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%