
நீண்ட இடைவெளி
நண்பனின் சந்திப்பு
மூப்பின் தோற்றம்
முற்றிலும் மாற்றம்
பழைய நினைவுகள்
அசையிட நினைத்து
அதில் வரும் சுகமே
இனி தென எண்ணி
இரண்டொரு செய்தி
எடுத்துச் சொல்ல,
எல்லாம் "வேஸ்ட் " என
மறுத்து முடித்தான்.
"ஏன்" என்ற கேள்வி
எழுவதன் முன்னே
இயந்திர கதியாய்
இதுவரை இயங்கி
திரும்பி பார்த்து
அறிந்தது என்ன.
வாழ்க்கை நமக்கு
வசப்படவில்லை.
சுந்தர மணிவண்ணன்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%