வேண்டும் வரம் அருளும் நவராத்திரி 4 ம் நாள் வழிபாடு : மகாலட்சுமி திருக்கோலம்

வேண்டும் வரம் அருளும் நவராத்திரி 4 ம் நாள் வழிபாடு : மகாலட்சுமி திருக்கோலம்


நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு ரூபத்தை வழிபாடு செய்கின்றோம். நான்காவது நாள் அம்பிகையை மகாலட்சுமியின் ரூபமாக வழிபாடு செய்யப்படுகிறது.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தென் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும்.

இவ்வாலயத்தில் 23ம் தேதி செவ்வாய்கிழமை முதல் கொலு அலங்காரம், தினசரி அம்பாள் ஒரு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். தினசரி இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவுகள் நடைபெறும்.


நான்காம் நாள் நவராத்திரி திருவிழாவில் அம்பாள் ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் அம்பாளுக்கு கதிர் பச்சை மலர்களால் அதாவது மரிக்கொழுந்து, தவனம் போன்ற மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெற்று பக்தர்களுக்கும்,பொது மக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.


நான்காம் நாள் உற்சவர் கொலு அம்பாள் நவராத்திரி விழா உபயதாரர் A.நடராஜன் 

(அக்க்ஷயா ஸ்டீல்ஸ் & பெயிண்ட்ஸ், பாத்திரக்கடை) கிருஷ்ணன் கோவில் தெரு, கோவில்பட்டி குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 நவராத்திரி விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் மு.வள்ளிநாயகம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக


கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%