வேலைவாய்ப்பு தரும் கல்வியையே 87 சதவீத மாணவர்கள் விரும்புகிறார்கள்; ஆய்வில் தகவல்
Nov 23 2025
20
கற்றலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று 60 சதவீத பேர் கூறி உள்ளனர்.
புதுடெல்லி,
இங்கிலாந்தில் உள்ள ஆர்லிங்டன் ஆராய்ச்சி மையம், லண்டன் பல்கலைக்கழகத்தின் மூலம், இந்திய மாணவர்களின் உயர்கல்வி குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில் தெரியவந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-
சர்வதேச உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் எதிர்பார்ப்பில் ஒரு சக்திவாய்ந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது, அது வகுப்பறை கற்றலுக்கு அப்பாற்பட்டது. கணக்கெடுக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் இந்திய மாணவர்கள் பயன்பாட்டு கற்றல், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் தொழில்முறை நடத்தைகளை தங்கள் கல்வி அனுபவத்தின் முக்கிய பகுதிகளாக கருதுகிறார்கள்.
உலக அளவில் 56 சதவீத மாணவர்கள், கல்வி குறித்து முடிவெடுக்கும்போது வேலைவாய்ப்பு என்பதை முதல் மூன்று காரணிகளில் ஒன்றாக குறிப்பிட்டனர். அதே நேரத்தில் இந்திய மாணவர்கள் சிறந்த முடிவு எடுக்கும்போது 87 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை முக்கியமாக கவனத்தில் கொள்வதாக குறிப்பிட்டனர். பாடங்கள் வடிவமைப்பு, கற்றலை நேரடியாக வேலைவாய்ப்புகளுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது.
கற்றலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று 60 சதவீத பேர் கூறி உள்ளனர். குறிப்பாக 56 சதவீத இந்திய மாணவர்கள் தொழில்முறை நடத்தைகளை உருவாக்குவது மிக முக்கியமானது என்று குறிப்பிட்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?