*அறிவிலே தெளிவு* *நெஞ்சிலே உறுதி*!

*அறிவிலே தெளிவு*  *நெஞ்சிலே உறுதி*!



அறுசீர் மண்டிலம்.


நல்ல சிந்தனை

வேண்டும்

நல்ல செயல்களும்

வேண்டும்

வல்ல முறைகளும்

வேண்டும்

வண்ண நிகழ்வுகள்

வேண்டும்!

சொல்லும் முறைகளும்

வேண்டும்

சோர்வே இலாமையும்

வேண்டும்

உள்ளம் மகிழவும்

வேண்டும்

உண்மை பேசவும்

வேண்டும்!


நெஞ்சில் உறுதியே

வேண்டும்

நினைவில் நல்லவை

வேண்டும்

வஞ்சம் இலாமையே

வேண்டும்

வார்த்தை சிக்கனம்

வேண்டும்!

கொஞ்சும் உள்ளமும்

வேண்டும்

கொல்லா நோன்புமே

வேண்டும்

நஞ்சு இலாமையே

வேண்டும்

நன்மை செய்திட

வேண்டும்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%