
ஏன்டி இந்த புடவை நல்லாயிருக்கா..எனக்கு நல்லாயிருக்குமா?
அம்மா!இதே கலர்தாம்மா ரெண்டு வருஷம் முன்னாடி எடுத்த..!
இல்லடி இது அதுலியே லைட் கலர்..இந்த பார்டர் வேறடி.அப்புறம், வித்தியாசமா வேற இருக்கு பாரு.அதுல மயில் இருக்கும் ..இதுல அன்னம் இருக்கு!
கடவுளே! வேற கலர் எடேம்மா!..
அப்ப இது நீ எடுத்துக்குறியா.?.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடி..விட மனசு வரலடி..
போங்கம்மா..இது பாட்டிஸ் கட்டுறது..எனக்கு வேண்டாம்..
யாருடி பாட்டி?..ஏங்க !..வந்து கடைக்கு வந்தா ..அப்படியே செல்போன தூக்கிக்கிட்டு போய் ஓரமா உக்காந்துக்குறது..இங்க வந்து பார்த்து சொல்லுங்க..
என்னாச்சி செலக்ஷன் முடிஞ்சிட்டா?
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..நீங்க சொல்லுங்க..எடுத்துக்கவா? வேணாமா..?
பிடிச்சிருந்தா எடுத்துக்க..ஏன் தர்க்கம் பண்ணிட்டிருக்க..
அப்பா..! அம்மாட்ட இந்த கலர் இருக்குப்பா..
பரவால்லமா..புடிச்சிருக்குனு சொல்றாப்ல ..வேணா உனக்கு பிடிச்ச மாதிரி ஒன்னு அம்மாக்கு எடுத்து குடு..அவ்வளவுதான..
ஒன்றுக்கு இரண்டாய் சேலை எடுத்துக்கொண்டு வாயெல்லாம் பல்லாய் வீட்டுக்கு வந்தாச்சி..ஒரு மணி நேரம் கழித்து..
முகத்தை தூக்கி வெச்சிருந்த தன் தாயிடம்..
"என்னாச்சி மா..? உனக்கு பிடிச்சதுதான அப்பா எடுத்து தந்தார்.இப்ப என்னம்மா அவர்ட்ட வம்பு பன்ற..!"
ஆமாம் எடுத்து குடுத்தாரே..ரெண்டும் வெலை கம்மிதான்.பாரு.! இப்பதான் என் ஃப்ரெண்டு போட்டோ போட்டிருக்கா..பாரு எத்தனை பெரிய பார்டர்..தக தகன்னு மின்னுது..!நான் எப்படி இந்த சேலைய காமிக்கிறது..
மா ..ரெண்டு சேலையா எடுத்தாச்சிலம்மா! பிறகென்ன ?
உன் அப்பா புத்திதான உனக்கும் இருக்கும்.ரெண்டு விலையும் போட்டு ஒரே சேலையா எடுத்திருக்கலாம்ல..எல்லாம் வன்மம்..
அப்பதான சொல்லலாம்.ரெண்டு சேலை எடுத்துக்கிட்ட..எடுத்துக்கிட்டனு.
அப்பாவும் மகளும் திருதிருன்னு முழிக்க...
( இது எப்படி முடியும்?..வருடா வருடம் தொடரும்..)
தஞ்சை பியூட்டிஷியன்
உமாதேவி சேகர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?