'பன்னோக்குப் பார்வையில் தமிழிலக்கணங்கள்' பன்னாட்டுக் கருத்தரங்கம்
Sep 21 2025
49

கோயம்புத்தூர், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் இணைந்து
"பன்னோக்குப் பார்வையில் தமிழிலக்கணங்கள்" என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் கோயம்புத்தூர், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் 20.9.2025 அன்று நடைபெற்றது. பேரூராதீனக் கல்வி நிறுவனங்களின் மேதகு தலைவர் முனைவர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அவர்கள் 155 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுதி-1, தொகுதி-2 ஆய்வுக்கோவையை வெளியிட்டு அருளுரை வழங்கினார்கள். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர், கல்லூரியின் மாண்புசார் செயலர் முனைவர் சி.சுப்ரமணியம் அவர்கள் நிறைவு விழாவில் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். படத்தில் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேரா.முனைவர் க.மனோன்மணி, இன்னாள் முதல்வர் பேரா.கா.திருநாவுக்கரசு, தமிழ்த்துறைத் தலைவர் பேரா.முனைவர் ர.பெருமாள், பேரா.முனைவர் க. சந்திரசேகரன் (ஒருங்கிணைப்பாளர்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேரா. முனைவர் நா.சுலோசனா (ஒருங்கிணைப்பாளர்), முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழின் ஆசிரியர், எழுத்தாளர் தேனி மு.சுப்பிரமணி, வரலாற்றுப் புதின எழுத்தாளர் சி.வெற்றிவேல், தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்.
லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளிலிருந்தும் புதுச்சேரி, தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழார்வலர்களென 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டும் கட்டுரை வாசித்தும் சிறப்பித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?