... திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஜனவரி- 24 ஆயக்குடி ஊராட்சியில் அமைந்திருக்கும் ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் மடத்தில் உள்ள ஸ்ரீ கொண்டம்மாள், ஸ்ரீ குப்பம்மாள், ஸ்ரீ சுப்பம்மாள்,ஸ்ரீ கஸம்மாள் , ஸ்ரீ நாகம்மாள் ஆகிய பேரன்டாலு தெய்வங்களின் நமது பிரம்ம குல கோத்திர குடும்ப தெய்வங்களுக்கு பேரண்டலு பூஜையும், நாக பூஜையும், கன்னி பூஜையும், வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ நாகம்மாள் தெய்வத்திற்கு கலசங்கள் வைத்து பூஜை செய்து அபிஷேகம், வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து அலங்காரங்கள் செய்து, வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பம்பை, உடுக்கையுடன், மேளதாளத்துடன், பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. வருடத்திற்கு ஒரு முறை பேரன்டாலு பூஜை நடைபெறும். இந்த பூஜையில் புதியதாக புடவை வைத்து வழிபடுவது வழக்கம் புதிய புடவையை தண்ணீரில் நினைத்து காய வைத்து மடுகாக வைத்து எடுத்துச் சென்று சாமியிடம் வைத்து பூஜை செய்வது வழக்கம். வெகு சிறப்பாக பூஜைகளும் நடைபெற்றது. ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் மூன்று வேலையும் உணவு வழங்கப்பட்டது. கூட்டு வழிபாடை ஏற்பாடு செய்தவர்கள்: பிரம்ம குல கோத்திரக்காரர்கள் அனைவரும் சேர்ந்து வெகு சிறப்பாக பூஜைகளை செய்திருந்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?