tamilnadu epaper

அசத்தலான சமையல் செய்வதற்கான சில குறிப்புகளை பற்றி பார்ப்போம்

அசத்தலான சமையல் செய்வதற்கான சில குறிப்புகளை பற்றி பார்ப்போம்


சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால், மிகவும் ருசியாக இருக்கும்.


 சேமியா பாயசம் செய்யும்போது, அவை குழைந்து போய்விட்டால், அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.


குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால், ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்தால் மென்மையாகிவிடும்.


 அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.


காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.


 கேழ்வரகை ஊற வைத்து, பிறகு அவற்றை அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.


வெண்டைக்காயை பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சிறிதளவு சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.


சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.


 உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.


காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்கக்கூடாது. ஏனென்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துக்கள் இருக்காது. மேலும் அதில் உள்ள மனமும் போய்விடும்.


 ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் எதுவும் வராது.


அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கனமில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும். 


 குழம்பு, பொரியல் செய்யும்போது உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் அல்லது ரஸ்கைப் பொடித்துத் தூவினால் அவை சரியாகிவிடும்.


-லால்குடி வெ நாராயணன்

SBI Manager Retired 

K062 SBIOA UNITY ENCLAVE MAMBAKKAM CHENNAI 600 127