tamilnadu epaper

அறுசுவை பச்சடி

அறுசுவை பச்சடி


அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டில் நல்லது கெட்டது எது வந்தாலும் சமாளிக்கும் விதமாக இந்த அறுசுவை பச்சடி செய்து நிவேதனம் செய்வோம்.


இதில் இனிப்பிற்கு வெல்லமும், காரத்திற்கு மிளகாயும், உவர்ப்பிற்கு உப்பும், புளிப்பிற்கு மாங்காயும், துவர்ப்பிற்கு கடுகும், கசப்பிற்கு புதிதாய் பறித்து வந்த வேப்பம் பூவும் சேர்த்து செய்யப்படுகின்றது.


செய்முறை


ஒரு பெரிய மாங்காய்க்கு ஒரு உருண்டை வெல்லம் எடுத்து பொடித்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கொதிக்க வைத்து இறக்கிக்கொள்ளவும்.


மாங்காயை துண்டுகளாக்கி நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும். தேவையானால் தோலுடன் செய்து கொள்ளலாம். கடித்து சாப்பிட சுவையாய் இருக்கும்.


ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து கடுகு, மிளகாய், வேப்பம்பூ சேர்த்து பொரித்து கொண்டு அதில் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்து, மசித்து வைத்துள்ள மாங்காயையும் சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும்.


சுவையான புத்தாண்டு அறுசுவை பச்சடி தயார். நீங்களும் செய்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்விலும் எல்லா வளமும் நலமும் அந்த முருகப்பெருமான் அருளால் கிடைக்கட்டும். நன்றி.