குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறைகள் எல்லாம் செய்ய முடியாது.
*அப்படி வரையறுப்பது சரியான ஆன்மீக நெறி முறையும் அல்ல.*
*மகாபாரதத்தில் கிருஷ்ணன் கீதா உபதேசத்தை.*.
*ஒழுக்கத்தில் சிறந்த பீஷ்மனுக்கு கூறவில்லை*.
*வித்தையில் சிறந்த துரோணருக்கு கூறவில்லை*.
*பக்தியில் சிறந்த விதுரனுக்கு கூறவில்லை* .
*பின் யாருக்குத்தான் கூறினான் ?*
*தன்னையே சரணாகதி அடைந்த அர்ஜுனனுக்குத் தான் கூறினார்*.
*இருப்பதிலேயே நண்பனிடம் சரணாகதி அடைவது தான் இயலாத காரியம்.*
*ஏனென்றால் நண்பனின் அத்தனை சேட்டைகளும் தான் நமக்குத்தான் தெரியுமே!*
*அதனால் நண்பனிடம் மட்டும் சரணாகதி அடைவது என்பது இயலாத காரியம்.*
*(கிருஷ்ணனைப் போன்ற நண்பன் மட்டும் நமக்கு உபதேசித்திருந்தால் என்ன சொல்லியிருப்போம்*. *உன் அட்வைஸை நிறுத்துறாயா? உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா?என்றிருப்போம்)*
*ஆனால் கிருஷ்ணனின் அனைத்து சேட்டைகளையும் அறிந்த பின்பும் (சிசுபாலன் கண்ணனின் சேட்டைகளை பக்கம் பக்கமாக பட்டியலிட்ட பின்பும்) அர்ஜுனன் சரணாகதி அடைந்தான்*.
*அர்ஜீனன் முழுவதும் ஏற்கும் தன்மையில் இருந்ததனால் கிருஷ்ணனுக்கு வேறு வழியே இல்லை அர்ஜுனனை சீடனாக ஏற்றுக்கொண்டான். கீதை அருளப்பட்டது*.
*இவ்வளவு ஏன்? ஞானத்திற்கெல்லாம் தலைவனாக இருக்க கூடிய சிவபெருமான் கூட தன் மகனாக இருந்தாலும், மண்டியிட்டு வாய் மூடி தலை குனிந்து தன்னை சீடன் என்ற நிலைக்கு இறக்கிக் கொண்ட பின்புதான் முருகனிடம் உபதேசம் பெறமுடிந்தது.*
*சம்மட்டி ஓசையை கேட்டு ஞானமடைந்தவரைப் பற்றியும், உடைந்த குடத்தின் ஓசையிலே ஞானமடைந்த பெண் புத்தத்துறவியைப் பற்றிய கதையையும் படித்துள்ளோம் தானே*.
*ஆகவே இங்கு *ஆன்மீகத்தில் முக்கியமானது குருவின் தகுதி அல்ல சீடனின் தகுதிதான் மிகவும் முக்கியமானது...!*
*எவ்வளவு மழை பெய்தாலும் திறந்த பாத்திரத்தைத்தான் மழையால் நிரப்ப முடியும்.*
*மூடிய பாத்திரத்தை வானமே கிழித்துக்கொண்டு பெய்தாலும் நிரப்ப முடியாது* .
*தெரியுமா உங்களுக்கு?*
*உண்மையிலேயே கிரேக்க ஞானி டயோஜனிஸிக்கு ஒரு நாய்தானே குரு*.
*நியூட்டனுக்கு ஆப்பிள் தானே குரு*.
*ஆர்க்கிமிடிஸிக்கு தான் குளித்த தண்ணீர்தானே குரு*
*உலகின் பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டைக்கு நட்சத்திரங்களை பற்றி விளக்கிய குரு சோப்பு நுரைதானே*.
*அதனால்தான் நதிமூலம் பார்ப்போரின் தாகம் தீர்வதில்லை..*
*ரிஷிமூலம் பார்ப்போர் ஞானம் அடைவதில்லை*..
*தவித்தவன் தண்ணீரை தேடி பயணிப்பது போல, தாகம் கொண்டவனின் தொண்டையை நனைக்க தண்ணீரும் பயணப்படுகிறது*.
*தன்னை தகுதி படுத்திக் கொண்டவன் தன் பாதையிலேயே தன் குருவைக் காண்பான்...! பாதையில் குருவை காண்போம்
பாதையில் குருவாவோம்.
-முனைவர் பாலசந்தர்
மண்ணச்ச நல்லூர்.