1. ச்ரவண பக்தி - அனுமார் - இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர்.
2. கீர்த்தன பக்தி - வால்மீகி - இராமாயணம் இயற்றியவர்.
3. ஸ்மரண பக்தி - சீதை - அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட
சீதை இந்த பத்து மாதம் இராமனையே நினைத்திருந்தாள்..
4. பாதசேவன பக்தி - பரதன் - இராமனின் பாதுகையை இராமனாக
நினைத்து வணங்கியவன்.
5. வந்தன பக்தி - வீபீஷணன் - இராவணனின் தம்பியானவன்,
இராமனையே வணங்கி வந்தான்.
6. அர்ச்சன பக்தி - சபரி - இராமனுக்கு நல்ல பழங்களைக் கொடுக்க
வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பழத்தையும் தானே கடித்துப்
பார்த்து அளித்தவள்.
7. தாஸ்ய பக்தி - இலட்சுமணன் - இராமனுடனேயே இருந்து அவரதி
சொல்படி நடந்தவன்.
8. ஸக்ய பக்தி - சுக்ரீவன் - இராமனுடன் நட்பு கொண்டவன்.
9. ஆத்ம நிவேதனம் - ஜடாயு - இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற முயன்று தன் உயிரைக் கொடுத்தவர்.
இந்த ஒன்பது வகை பக்தியில் எது சிறந்ததாக கருதப் படுகிறது?
நமக்கு பார்க்க பிடிக்காத விஷயங்களை கண்ணை மூடிக்கொண்டு தவிர்க்கலாம்.
பேச பிடிக்கவில்லை என்றால், வாயை மூடிக் கொள்ளலாம்.
ஆனால் நல்ல விஷயங்களை எப்போதுமே கேட்கவேண்டும் என்பதற்க்காக தான் காது திறந்தே இருக்கிறது.
நடந்து கொண்டே இருந்தால், கால் வலிக்கும்.
பார்த்துக் கொண்டே இருந்தால் கண் வலிக்கும்.
பேசிக்கொண்டே இருந்தால் வாய் வலிக்கும்.
எழுதிக் கொன்டே இருந்தால் கை வலிக்கும்.
ஆனால் கேட்டுக்கொண்டே இருந்தால் காது வலிக்காது!!!!
அதனால் எப்பொழுதும் நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்..
ஆண்டாள் திருப்பாவையில் கேசவனை பாடு என்றும், கேட்டே கிட என்றும் பாடியுள்ளாள்...
-M. ராதா கிருஷ்ணன்