ஏகாங்கோவின் தலைநகர் கின்ஷாசாவிற்கு அருகில் உள்ள ஆற்றில் 270க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகில் எஞ்சின் கோளாறு காரணமாக திடீரென கவிழ்ந்தது. இதில் குறைந்தது 80 பேர் பலியாகியிருக்கலாம் என ஜனாதிபதி பெலிக்ஸ் ஷிசெகெடி தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் காங்கோவின் தலைநகரான கின்ஷாசாவுக்கு 271 பேருடன் சென்ற படகு இயந்திரக் கோளாறு காரணமாக மூழ்கியதாக காங்கோ அதிபர் தெரிவித்துள்ளார்.இந்தப் படகில் 271 பேரில், 86 பயணிகள் உயிரிழந்தனர். 185 பேர் கரைக்கு நீந்தி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து முஷி நகரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர்கள் அருகில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படகு ஆற்றங்கரை ஓரத்தில் மோதி உடைந்ததாக அவர் கூறினார்.இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி சமூக வலைதளங்களில் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார். இதற்கான மூல காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணையைத் தொடங்கப்படும். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதே போல் மற்றொரு பதில் “ இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் உண்மையான காரணங்கள் குறித்து உடனடிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற ஒரு பேரழிவு மீண்டும் நிகழாமல் எச்சரிக்கையும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்” காங்கோ அதிகாரிகள் அடிக்கடி அதிக சுமைக்கு எதிராக எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளார். மற்றும் நீர் போக்குவரத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களை தண்டிப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும், பெரும்பாலான பயணிகள் தொலைதூர பயணங்களுக்கு படகுகளையே நம்பி உள்ளதால் அடிக்கடி இதே போல் விபத்துக்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.