வேலூர், மே 16-
வேலூர் மாவட்டம், பழைய காட்பாடி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் விஷ்ணு பதி புண்ணியகால சிறப்பு பூஜை நடந்தது.
வைகாசி மாதத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை அதிகாலை நடந்தது. இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் 27 முறை கோயிலை வலம் வந்து ஸ்ரீ வரதராஜ பெருமாளை வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ சண்முகம் குருக்கள் வெகு விமரிசையாக செய்திருந்தார்.