tamilnadu epaper

திருப்பதி கோவிலில் மீண்டும் விஐபி பிரேக் தரிசனம்

திருப்பதி கோவிலில் மீண்டும் விஐபி பிரேக் தரிசனம்


திருப்பதி, மே 16–

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் நடைமுறையில் இருந்தது. கூட்டத்தில் இடிபடாமல், அதிக நேரம் வரிசையில் காத்திருக்காமல், நேரடியாக சென்று, அதுவும் ஏழுமலையானை பக்கத்திலேயே சென்று தரிசிக்கும் வாய்ப்பை வழங்கக் கூடிய தரிசனங்களில் இதுவும் ஒன்று. இதற்காக தினமும் குறிப்பிட்ட நேரத்தை தேவஸ்தானம் ஒதுக்கி வந்தது. அந்த சமயத்தில் சாமானிய பக்தர்களுக்கான தரிசனம் முற்றிலுமாக நிறுத்தப்படுவது வழக்கம்.

 கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் ஜூலை 15 வரை திருப்பதி விஐபி பிரேக் தரிசனம் முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. இந்நிலையில் தற்போது விஐபி பிரேக் தரிசனத்தை மீண்டும் துவக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.