tamilnadu epaper

அனைத்து நோய்களையும் குணமாக்கும் சென்னிமலை சுப்ரமணியசுவாமி..

அனைத்து நோய்களையும்   குணமாக்கும் சென்னிமலை சுப்ரமணியசுவாமி..

அனைத்து நோய்களையும்   குணமாக்கும் சென்னிமலை சுப்ரமணியசுவாமி.. 

நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.

சென்னிமலை முருகப்பெருமான் மூலவர், செவ்வாய் அம்சமாக விளங்குவதால், பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்
கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சசுடி கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்
பட்டது. முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.

 திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை. முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு

இத்தலம்  முக்கியமானது கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. . நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்
றைப்பெற இத்தலத்தில் முருகனிடம்
வேண்டுகிறார்கள்.

இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள். 

இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, இத்திருத்தலம் . பக்தர்கள் எளிதில் செல்ல 1320 திருப்படிகள் கொண்ட படிவழி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல 4 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை ஒன்றும் உள்ளது. படிவழியில் ஆங்காங்கே நிழல்தரும் மண்டபங்களும், குடிநீர் வசதியும், இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக படிவழியில் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலில் மூலவர் சன்னதிக்கு பின்புறம் அருள்மிகு வள்ளி, தெய்வானை சன்னதி தனியாகவும், இதற்கு பின்புறம் பின்நாக்கு சித்தர் சன்னதி தனியாகவும் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தென்புறம் அமைந்துள்ளது, 

தினமும் காலை 5.30 மணிக்கு அடிவார டோல்கேட் திறக்கப்பட்டு தொடர்ந்து இரவு 7.45 மணி வரை வாகனங்கள் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படும் என்றும், அதேபோல் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் ஒரு மணி நேரம் முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு அடிவார டோல்கேட் திறக்கப்பட்டு தொடர்ந்து இரவு 8 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அதன் பிறகு மலைக்கோயிலில் இருந்து கீழே வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

ஈரோடு - பெருந்துறை சாலையில் அமைந்த இக்கோயில்,ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், பெருந்
துறையிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும், ஈங்கூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள சென்னிமலை அருகே உள்ள இச்சிப்பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது.

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.


-ப.சரவணன்.