உறவுகளை
மேம்படுத்த வேண்டும்.
புதுப்பிக்க வேண்டும்
அவ்வப்போது.
புரிதல் இன்றி
விரிசல் ஏற்படுமானால்
பாசத்தால்
மொழுகிடவேண்டும்.
குறைகளே இருந்தாலும்
களைந்து
நிறை காண்பதே
மெய்யறிவு.
நம்மில் பிரிவினையும்
பேதமுமின்றி
சமரசத்துடன்
பயணப்பட வேண்டும்.
நெருக்கமானவர்களை
அருகில் இருக்கும் போது
பெருமையை உணர்வதில்லை.
நினைவுகளால்
மீட்டெடுக்கும் போது
பத்திரப்படுத்திக் கொள்வதே
அன்பின் அழகு.
-எறும்பூர் கை. செல்வகுமார்,
செய்யாறு.