tamilnadu epaper

வாசகர் கடிதம் (சிவ. சே. முத்துவிநாயகம்)-16.04.25

வாசகர் கடிதம் (சிவ. சே. முத்துவிநாயகம்)-16.04.25


    காஞ்சிபுரம் என்றாலே கோயில்கள் நகரம் என்று பெயர். அவற்றில் பார்க்க வேண்டிய 5 கோயில்கள் மிகவும் சரியே. ஏனென்றால் காஞ்சியில் இருக்கும் போது இந்த 5 கோயில்களுக்கும் சென்று இறை வழிபாடு செய்திருக்கிறேன். சிற்பக்கலையும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இப்படி சிற்பங்கள் வடிக்க சிற்பிகள் பிறந்து தான் வர வேண்டும். 

        அரசுப்பள்ளி ஆசிரியை சீட்டு நடத்தி மோசடியாம். தண்டனை வேலை இழப்பு ஊதியம்

ஓய்வூதியம் அத்தனையும் பறிபோய் விடுமே. படித்தும் பயனில்லையே.

      எவ்வளவு கெடுபிடி செய்தாலும் போதைப் பொருள் கடத்த கொஞ்சம் கூட பயப்பட வில்லையே. இளைய தலைமுறையை அழித்தே

விடுவார்கள். அங்கங்கே பல சமூகவிரோதச் செயல்கள் அரங்கேறி சமூகச் சீர்கேட்டை யாரும் உணரவில்லையே

       முருங்கைக் காயா!

முந்தானை முடிச்சு பட வசனம் நினைவுக்கு வருகிறது. முருங்கைக் காயில் அத்தனை மருத்துவ குணங்களும் அடங்கியிருக்கிறது.

     கோவிலுக்குச் சென்று வரும்போது பொருள் தொலைவதை ஒரு அபசகுணம் என்றே எல்லோரும் நினைக்கிறோம். ஆனாலும் நடந்து முடிந்த பின் என்ன செய்ய முடியும் . நினைத்துக் கவலைப்படுவதை அவன் மனம் ஆறுதல் கொள்வதே நல்லது.

தொலைந்தது நன்மைக்கே என்று இருப்பது ஆறுதலைத் தரும் கட்டுரை.

      குழந்தைகள் கை

வண்ப் பகுதி சிறப்பு

    நகைச்சுவைகள் அருமை.

     தன்வினை தன்னைச்

சுடும். சோம்பேறிப் பெண்கழுதை போல நிறைய பேர்.

   பவன் கல்யாணின் மனைவி உருசிய நாட்டுக்காரர் என்றாலும் 

இந்நாட்டின் கலாச்சாரப்படி தன்மகன் உடல் நலம் பெற வேண்டி ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தி வழி பட்டிருக்கிறாரே. பாராட்டப் பட வேண்டியவர்.

      சிங்கப்பூரில் தனது பணியை இராஜினாமா செய்வதை டிஸ்யூ தாளில் எழுதிக் கொடுத்தவர் எவ்வளவு வேதனையோடு அதே சமயத்தில் துணிச்சலாக முடிவெடுத்திருக்கிறார் .

அந்த நிறுவனம் கண்விழிக்குமா?

 

-சிவ. சே. முத்துவிநாயகம்

திருநெல்வேலி