அபய ஹஸ்தம் காட்டி அழகிய மணவாளன் சதா ஸ்ரீரங்கத்தில் வாழ்கிறான்.
அவனுக்கு அதனால் ”அபயப்ரதராஜன்” – அன்பர்களுக்கு அபயம் அளிப்பதில் ப்ரதானமானவன் என்று திருப்பெயர் உள்ளது.
ஸ்ரீராம நவமி தொடங்கி ஆரம்பித்த அரங்கேற்றம் தாயார் சன்னிதி முன் உள்ள ஆறு தூண் மண்தபத்தில்
ஓராண்டு அரங்கேற, அழகிய மணவாளன் தன் உத்சவத்தை நிறுத்திக் கொண்டான்.
யுத்த காண்ட முடிவில் சீதையை த்ரிஜடை அலங்கரிக்கும் செய்யுள் அழகைக் கேட்ட ஸ்ரீரங்க நாச்சியார்,
அர்ச்சகர் மேல் ஏவி வந்து, தன்னை சகல ஆபரணங்களாலும் அலங்கரித்து, பல்லக்கில் இருத்தி வாசல் வரை
இட்டுச் செல்ல ஆணை இட, அவ்வாறே புறப்பாடும் ஆக, ஜனங்கள் காண, அவள்,
”கம்பரே! சீதையாய் இருந்த போது கூட நான் இவ்வளவு அழகாக இல்லை!
உன் தமிழ் என்னை ஈர்க்கிறது,
மீண்டும் நீ வர்ணிக்கும் அழகில் சீதையாக மாற மனம் விரும்புகிறது….நீ கவிச்சக்ரவர்த்தி ஆகுக!” என்று பட்டம் அளித்தாள்.
உலகின் மற்ற இலக்கிய மேதைகளுக்கு எல்லாம் மன்னர்களும் மக்களும் பட்டம் அளித்தனர்,
கம்பனுக்கோ சாட்சாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியே பட்டம் அளித்தாள்.
ப.சரவணன்.