பிள்ளையென்றால் பெற்றோர்க்கு உதவ வேண்டும்
பெற்றோர்க்கு உதவாத பி்ள்ளை வீணே !!
பிழைக்கஉண வென்றாலது பசிக்கும் நேரத்தில்
புசித்துப்பின் பசியாறக் கிடைக்க வேண்டும் !!
தாகமெடுக் கும்நேரத்தில் தண்ணீர் வேண்டும்
தாகம்தனிக் காநீரால் பயனே இல்லை !!
குடும்பநிலை வரும்படியும் அறியாப் பெண்கள்
குடும்பம்நடத் தத்தெரியா பெண்கள் உதவார் !!
ஆள்வோர்சினம் கொண்டுதன்நிலை அறியாப் பகையில்
அடுத்தநாட் டோடுபடை ஏவுதல் அழிவே !!
அறிவுதரும் ஆசான்சொல் கேட்கா சீடன்
அறிவினைப்பெ ருக்கிக்கொள் வதென்பதும் அரிதே !!
புண்ணியதீர்த் தமென்றாலது பாவம் போக்க
பாவம்போக்கா தீர்த்தத்தால் பயனே இல்லை !!
உலகிலுள்ள அதிசயங்கள் ஏழென அறிவோம்
உலகினிலுள் ளபயனற்றவை அறிந்து நடப்போம் !!
சண்முக சுப்பிரமணியன்
திருநெல்வேலி