tamilnadu epaper

என்னை நான் சந்தித்தேன்

என்னை நான் சந்தித்தேன்


ஆசிரியர்: ராஜேஷ்குமார் 

விலை: ₹390

வெளியீடு: அமராவதி 

தொடர்புக்கு: 9444169725/9551618087


படிப்பு சான்றிதழ்கள் காணமல் போனதால் வாழ்க்கையில் தான் தவறவிட்ட முதல் வேலை , அதன் பின்னர் பார்த்த தற்காலிக ஆசிரியப்பணி, நிரந்தரப் பணிக்காக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி வலியுறுத்தலின் பேரில் BT ஓராண்டு பயின்று தேர்ச்சி பெற்றது.


       கொண்டு வந்தாலும் கொண்டு வராவிட்டாலும் தாய் என்ற " தூக்கு தூக்கி" பட வசனம் போல, அவரின் அம்மா அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது.


     தாயின் சொல்லைத் தட்டாமல் , மூத்த தங்கை கணவரின் ஜவுளி வியாபாரத்தில் தன் அப்பாவுடன் இணைந்து வெளியூர்களுக்கு பயணித்தது...


    முதல் கதை மாலை முரசு நாளிதழில் பிரசுரமானது,

    

    குமுதம் இதழில் ரா.கி.ரங்கராஜனை சந்தித்து தன் சிறுகதை ஏன் வெளிவரவில்லை? என இவர் கேட்க, அவர் எத்தனை கதைகள் அனுப்பினீர்கள் தகுதியுடையதாக இருந்தால் வெளிவரும் என்றதும், இதுவரை 127 கதைகள் அனுப்பியதாகக் கூறியதும், அதன் பின்பும் கதைகள் வராமல் 128 வதாக எழுதிய கதை பிரசுரமானது, 

      

    சாவி அவர்கள் இவருக்கு தொடர்ந்து தினமணி , குங்குமம் இதழ்களில் வாய்ப்பு அளித்தது


       குமுதம் குழும இதழான மாலைமதி இதழில், முதன் முதலாக " வாடகைக்கு ஒரு உயிர்" நாவல் எழுதியது.


    கல்கண்டு இதழில் முதன் முதலாக " ஏழாவது டெஸ்ட் டியூப்" தொடர் எழுத வாய்ப்பும், அதன் மூலம் கிடைத்த லேனா தமிழ்வாணன் நட்பும்,


    ஜி.அசோகன் இவரை பாக்கெட் நாவல் இதழில் "ஒரு மாலை நேர மரணம்" எழுத வைத்தது. தனியாக இவருக்கு என "க்ரைம் நாவல் " தொடங்கியது


   " தூறல் நின்னு போச்சு " பட தயாரிப்பாளர்கள் நஞ்சப்பன், ஆறுமுகசாமி இவரின் கதையை படமாக்க நினைத்து பின் கைவிட்டுப்போனது,


சினிமா துறையினரால் சந்தித்த 24 காரட் துரோகங்கள்.


      குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர் எழுதச் சொன்னது, பின்னாளில் பெரிய ஆளாக வருவார் எனக் கணித்தது.


    விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் இவரின் தொடருக்கு போட்டி வைக்கத் தீர்மானித்து பின் அது கைவிடப்பட்ட காரணம்...

     1000 நாவல்கள் எழுதியதற்கு நடந்த பாராட்டு

விழாவில் டி.ராஜேந்தர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றது.


   பாரதி பதிப்பகம் இவரின் 5 புத்தகங்களை வெளியிட்ட விழாவில் , எழுத்தாளர் லஷ்மி சொன்ன அறிவுரை.


      இவருக்கு தெரிந்த பிரபல கோவை எழுத்தாளர் பெண்மணி வீட்டில் , 60 பவுன் நகை திருட்டு போக, 3 மாதங்களில் அவை திரும்பக் கிடைக்கும் என ஆருடம் சொன்னது.


    என்னால் முடியாது , எண்ணால் முடியும் என எண்கணித ஜோதிடம் மூலம் இவர் உச்சம் பெறுவார் என கே.கே.பாலசுப்ரமணியன் சொன்னது


    இவரின் அம்மாவும்- மனைவியும் தாயும் மகளும் போல வாழ்ந்தது என பல அரிய, அறிய வேண்டிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது.


     வாசகனை வா சகா என மதிக்கும் இவரை முதன் முதலாக, நவம்பர் 16, 2016 ல் திருச்சி" ஸ்ரீமதி இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லூரியில்" தினமலர் சார்பில் , இவரது 50 ஆண்டு கால எழுத்துலக சாதனையைப் பாராட்டி நடைபெற்ற விழாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.


    இப்புத்தகம் "அன்னையர் தினம்" ஆன 11.05..25 அன்று நண்பர் செந்தில் குமார் அமிர்தலிங்கம் மூலம் படிக்கக் கிடைத்ததும் வெகு பொருத்தமே.


-ஸ்ரீகாந்த்

திருச்சி