tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை

அறிவோம் அபிராமி அந்தாதியை

 

வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,

இருந்தாள், பழைய இருப்பிடமாக; இனி எனக்குப்

பொருந்தாது ஒரு பொருள் இல்லை-விண் மேவும் புலவருக்கு

விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே

--------------------

 

வருந்தாவகை - இடர்படா வண்ணம், என் மனத்தாமரையினில் - ஹ்ருதய கமலமாகிய எனது மனதில், வந்து புகுந்து 

இருந்தாள் - வந்து விற்றிருந்தாள், பழைய இருப்பிடமாக - அது அவளது பழைய இருப்பிடமே, இனி எனக்குப்

பொருந்தாது ஒரு பொருள் இல்லை- ஆகையால் இந்த உலகத்தில் எனக்கு வேண்டியது என எதுவும் இல்லை, விண் மேவும் புலவருக்கு - விண்ணுலகத்தில் உள்ள தேவர்களுக்கு, 

விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே - வேண்டிய விருந்தாக கடலில் தோன்றிய அமுதத்தை தந்த அன்னையை 

----------------------

 

பாற்கடலில் அமுதக் கடைந்த அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கு இடையே அதை யார் பெற்றுக் கொள்வது என்ற போர் ஏற்பட்டபோது அதனை தேவர்களுக்கு அருளுவதற்கு அருள் புரிந்த அன்னையே. ஆலயத்தில் உள்ள உற்சவமூர்த்திகளை ஊர்வலம் சென்ற பிறகு தனது யதாஸ்த்தானம் என்று சொல்லக்கூடிய பழைய இடத்தில் வீற்றிருக்க செய்வார்கள். அதுபோல எனது இதயத்தாமரையில் நான் தேடி அலையாத படி யதாஸ்தானமாக அமர்ந்திருக்கிறாய். இதற்கு மேல் நான் அடைய வேண்டிய பொருள் (பேறு) ஒன்றும் இல்லை.  

 

(வேலை - கடல்)

 

"வேல் கொண்டு வேலை பண்டெரிவோனே ..." - திருப்புகழ் 

 

(தொடரும் /வளரும்) 

சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை