இழைக்கும் வினை வழியே அடும்காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து ‘அஞ்சல்’ என்பாய்! அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!
உழைக்கும்பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.
இழைக்கும் வினை வழியே = நான் முன்பிறவிகளில் செய்த வினை பயனின் வழியாக அடும்காலன் = கொடிய எமன்
எனை நடுங்க
அழைக்கும் பொழுது = நான் பயந்து நடுங்கும்படியாக என்னை அழைக்கும் போது
வந்து ‘அஞ்சல்’ என்பாய்! = நீ என் எதிரே வந்து பயப்படாதே என்பாய்
அத்தர் சித்தம் எல்லாம் = எந்த சிவனின் உடல் எல்லாம்
குழைக்கும் = உருகும்படி
களபக் குவிமுலை = மணம் வீசும் சந்தனம் ஊசிய திரு மார்புகளை உடைய
யாமளைக் கோமளமே! = சியாமளாவாகிய கோமளமே (சுந்தரியே).
உழைக்கும்பொழுது= எம வேதனை படும்போது
உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே = ஓடி வந்து உன்னை அன்னையே என்று அழைப்பேன் அப்போது நீ எனக்கு அபயம் தர வேண்டும்.
இந்த உலகத்திற்கு தந்தையாக விளங்கக்கூடிய பரமசிவனின் உடம்பெல்லாம் உருகும் படியாக வாசனை வீசும் சந்தனங்களை தனபாரங்களில் பூசி இருக்கும் அன்னையே. என் உடம்பெல்லாம் நடுங்கும்படியாக கொடியை எமன் என்னை அழைக்கும் போது அன்னையே என்று உன்னிடம் ஓடி வருவேன். அப்போது எனக்கு அபயம் அளித்து என்னை காக்க வேண்டும்.
(தொடரும் / வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை