tamilnadu epaper

அலங்காநல்லூர் களஞ்சியம் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தரப் பரிசோதனை பயிற்சி

அலங்காநல்லூர் களஞ்சியம் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தரப் பரிசோதனை பயிற்சி


அலங்காநல்லூர்.மே. 01-


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மதுரை கிராமப்புற மண்டலம் குறிஞ்சி பொதிகை பாலமேடு மற்றும் சோலை வட்டாரங்கள் இணைந்து நடத்திய உணவுப் பொருள் பாதுகாப்பு பயிற்சி தர பரிசோதனை பற்றிய பயிற்சி நடைபெற்றது இதில் 95 களஞ்சிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வணிகர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார் கலந்து கொண்டு உணவுகளின் தரம் பேக்கிங் பற்றிய தகவல்களை தெளிவாக விளக்கிப் பேசினார். பாரிக்கான் கம்பெனியின் பொது மேலாளர் கார்த்திகா அவர்கள் கலந்து கொண்டு எண்ணெய் கலர் பொடி குடிநீரில் ஏற்படும் கலப்படங்கள் மற்றும் அதன் தீமைகள் பற்றி விளக்கமாக பேசினார். இவ்விழா ஏற்பாடுகளை தானம் அறக்கட்டளை மற்றும் களஞ்சிய பணியாளர்கள் செய்து இருந்தனர்...