சென்னை,
தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான வேலுவின் மகளின் திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
இந்த திருமண விழாவில் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில், இந்த விழாவில் பா.ஜ.க. மகளிர் அணி பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஆகியோர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தி.மு.க. எம்.பி. கனிமொழியை, வானதி சீனிவாசன் சந்தித்தார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். இருவரும் உற்சாகமாக பேசிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.