திருப்பதி:
ஆந்திர மாநிலம் மங்களகிரியில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க. அனைவரும் ஒன்றிணைந்து பிரதமருக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.நாடு பிரிக்கப்பட்டபோது பாகிஸ்தானில் உள்ள அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று ஜின்னா கூறினார்.
இப்போது அங்கு லட்சக்கணக்கான இந்துக்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. கிஸ்தானில் எவ்வளவு முஸ்லிம்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு இந்தியாவிலும் முஸ்லிம்கள் உள்ளனர்.
இந்துக்கள் பாகுபாடு காட்டினால் இவ்வளவு முஸ்லிம்கள் இங்கே இருக்க முடியுமா? இந்துக்களுக்கான ஒரே நாடு இந்தியா.
அவர்கள் இங்கே கொல்லப்பட்டால் எங்கே போவார்கள். நாட்டில் மத நல்லிணக்கம் மிகவும் அவசியம். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் பேச அனுமதிக்கப்பட வேண்டாமா? மதச்சார்பின்மைக்கு வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தாதீர்கள்.
இதுதான் புதிய இந்தியா. இதற்கு முன்பு இருந்த நாடு அல்ல. அவர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதை நாங்கள் சும்மா உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
உண்மையை பேசுவதால் அது வெறுப்பு என்று அர்த்தமல்ல. இது பயங்கரவாதிகள் மீதான வெறுப்பு மட்டுமே. நம் நாட்டில் ஏராளமான முஸ்லிம் தலைவர்கள் உள்ளனர்.
நாம் எப்போதாவது அவர்கள் மீது வெறுப்பைக் காட்டியிருக்கிறோமா?
மதம் குறித்து எதுவும் பேசாத சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக் கொன்றாலும், அந்த பயங்கரவாதிகளுக்கும், அவர்களை ஊக்குவித்த பாகிஸ்தான் நாட்டுக்கும் இங்கு ஆதரவாக பேசுவது மிகவும் தவறு.
ஆயினும் நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்று கூறுபவர்கள் அந்த நாட்டுக்கே சென்று விடுங்கள். பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒரே மாதிரி நடந்து கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.