tamilnadu epaper

ஆடி மாதம் அம்மன் மாதம்*

ஆடி மாதம் அம்மன் மாதம்*

பிரத்தியங்கிரா தேவி*

 

அய்யாவாடி யில் கோயில் கொண்டுள்ள தேவி சிம்ம முகத்தோடும் 18 திருக்கரங்களோடும் 4 சிம்மம் பூட்டிய ரதத்தில் லக்ஷ்மி சரஸ்வதியோடு காட்சி தருகிறாள். இவர் சரபேசுவரருடைய நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியதாகக் கூறுவர்

 

பஞ்சபாண்டவர்கள் பிரத்தியங்கிரா தேவியை வழிபட்ட அந்தத் திருவிடம் ஐவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் ஐயாவாடி என்று அழைக்கப்படுகிறது.

திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி, மகா சக்தி கொண்டவள். மகோன்னத குணங்கள் நிறைந்தவள். நல்லவர்களுக்கு உண்டாகிற எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்குபவள். இழந்தவற்றையெல்லாம் மீட்டுக் கொடுப்பவள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

 

கீதா ராஜா சென்னை