பரிக்ஷீணா மத்யே பரிணத - ஸரச் சந்த்ர வதனா'

 

-செளந்தர்ய லஹரி 

 

தெய்வத்தையே தாயாக நினைக்கும்போது, தன்" />

tamilnadu epaper

ஆடி மாதம் அம்மன் மாதம்

ஆடி மாதம் அம்மன் மாதம்

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி*

 

"க்வணத் காஞ்சீ - தாமா கரிகலப - கும்ப ஸ்தன நதா

பரிக்ஷீணா மத்யே பரிணத - ஸரச் சந்த்ர வதனா'

 

-செளந்தர்ய லஹரி 

 

தெய்வத்தையே தாயாக நினைக்கும்போது, தன் குழந்தைகளைக் காக்க அவள் பூமிக்கு வந்து விடுகிறாள். 

"முழுமதி நிகர்த்த வடிவுடையாளை வணங்கினால் எதிரிகளே இருக்க மாட்டார்கள்' என்கிறார் ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில்.

 

திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது

 

அனைவரும் சிவஞானம் பெற்று, பாவங்கள் நீங்கி, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்' என்று அன்னை நீர் லிங்கம் பிடித்து வழிபட்டதால் இது தனிச் சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது. 

 

அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சந்நதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சந்நதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர். இது இத்தல விசேஷமாகும்.

 

கீதா ராஜா சென்னை