மஹா சரஸ்வதி அம்மன்*
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே உள்ள *கூத்தனூர்* கிராமத்தில் அமைந்துள்ளது.
பழம்பெரும் தமிழ்க்கவி ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் இந்த கூத்தனூர். மேலும் தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழன் இக்கவியின் தமிழ்ப்புலமையை பாராட்டி இக்கிராமத்தை பரிசாக அளித்தார். எனவே இக்கிராமம் கூத்தனது ஊர் என்று பொருள் பட கூத்தனூர் என்றும் கூறுவர்.
விஜயதசமி, இக்கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான விழா. தேர்வுக்குச் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெறவும் மற்றும் பள்ளி சேர்க்கைக்கு முன்னர் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் கல்விக்கடவுளாம் சரஸ்வதி அம்மனை வழிபட்டு பயனடைகின்றனர்.
வெண்ணிற ஆடையில், வெண் தாமரையில் பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி அமர்ந்திருக்கிறார்.
கீதா ராஜா சென்னை
*தொடர் முடிவுற்றது*