tamilnadu epaper

ஆவணி அவிட்டம் ஸ்பெஷல் !

ஆவணி அவிட்டம் ஸ்பெஷல் !

பெருமைகள்_கொண்ட_ஆவணி_அவிட்டம்!

 

‘‘நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்)இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை. அது ஞானக்கண். ஞானம் எனும் கண்ணைப் பெறுவதற்கான சடங்கு... உபநயனம். அதாவது, உபநயனம் என்றால் துணைக்கண் என்று அர்த்தம். 

 

ஞானம் எனும் கல்வி அறிவைப் பெற்றால் மட்டுமே ஒருவன் வாழ்வில் முழுப்பயனைப் பெறுகிறான் என்பது ஆன்றோர் வாக்கு. கடவுளைப் பற்றி அறியும் அறிவே உயர்ந்த அறிவு. அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுகின்றனர். மகாவிஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. 

 

அதிதி & காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்து வைத்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இந்தச் சடங்கின் சிறப்பை உணரலாம். பூணூலை யக் ஞோபவீதம் என்பார்கள். அதாவது மிகவும் புனிதமானது என்று அர்த்தம். 

 

பூணூல் அணிபவர்களும், அதனைத் தயாரிப்பவர்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத் துவத்தை உணர்வது அவசியம். இதை குருமுகமாக, குருவைக் கொண்டே செய்ய வேண்டும். வீட்டில் ஆச்சார்யர்களை வரவழைத்து, காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பூணூல் போடுவார்கள். 

 

ஒரு குருவின் துணையுடன் இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்வதுதான் இதன் நோக்கம். வீட்டுப் பெரியோர், தகப்பனார், ஆச்சார்யர் ஆகியோர் மூலமாகத்தான் உபநயனம் செய்விக்கப்பட வேண்டும்.இப்படி உபநயனம் செய்விக்கப்பட்டபின் தாங்கள் அணிந்த பூணூலை, ஆண்டுதோறும் ஆவணி அவிட்ட நாளில் மாற்றி புதிய பூணூல் அணிவார்கள். அதுவே ஆவணி அவிட்ட நாளாக அனுஷ்டிக்கப்படு கிறது.

 

தக்ஷிணாயன காலத்தில் வரும் 'ஆவணி அவிட்டம்' என்பது ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் வரக்கூடிய விழாவாகும். வரலட்சுமி விதம், காராடையான் நோன்பு போன்று பல விரதங்கள் பெண்களுக்கு உள்ளன. ஆண்களுக்காக இருக்கும் விழா ஆவணி அவிட்டம். 

 

வேத பாடங்களைப் பாராயணம் செய்து படிப்பதற்கு உத்தராயண காலத்தையும் அதன் உட்கருத்துக்களை, உப நூல்களையும் அறிந்து கொள்வதற்கு தக்ஷிணாயன காலத்தையும் நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அப்படி ஆண்டு முழுவதும் படிக்கும்போது ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்திட, 

ஆவணி அவிட்ட நாளில் வழக்கம்போல் காலையில் எழுந்ததும் இறைவனைத் துதி செய்யவேண்டும். பின்னர், நீராடி புத்தாடைகள் உடுத்தி சந்தியா வந்தனம், பிராணயாமம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். காமோ கார்ஷீத் ஜபத்தை 108 முறை சொல்லவேண்டும்.இதன் பிறகு எல்லா க்ஷேத்திரங்களில் உள்ள தெய்வங்கள் எல்லா நதிகளின் தேவியர்களையும் அழைத்து மகா சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். மீண்டும் ஆற்றில், குளத்தில், வீட்டில் என அவரவர் வசதிக்கேற்ப நீராடி புது ஆடைகள் அணியவேண்டும். இரண்டு முறை நீராட வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

 

அதன் பிறகு, தந்தை, ஆச்சார்யர், குரு இவர்களில் யாரேனும் ஒருவரின் வாயிலாக பூணூலை அணிவிக்க வேண்டும். திருமணமாகாதவர்கள் ஒரு பூணூலையும் திருமணமானவர்கள் இரண்டு பூணூலையும் திருமணமான பின் தந்தையை இழந்தவர் மூன்று மூன்று பூணூலையும் அணியவேண்டும். அதன் பிறகு காயத்ரீ ஜபம் சொல்ல வேண்டும். உலகம் சிறக்கவும் நாடு சிறக்கவும் தன் நகரம் சிறக்கவும், தனது கிராமம் சிறக்கவும் தனது வீடு சிறக்கவும் காயத்ரீ ஜபத்தைச் சொல்ல வேண்டும். 

 

காயத்ரீ மந்திரத்தை தினம்தோறும் சொல்வது மிகவும் முக்கியம். சொல்லாலும் மனதாலும் செயலாலும் தீங்கிழைக்காத வைராக்கியத்தை மேற்கொள்ளவேண்டும். வைராக்கியம் இருந்தால் எல்லாம் சித்திக்கும் வைராக்கியம் போனால் சகலமும்போய்விடும் என்பதை மனதில் இருத்த வேண்டும் என்பதே ஆவணி ஆவிட்டத்தின் நோக்கம்'' .

 

பூணூல் அணிவதன் மகத்துவம். 

 

ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது. இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும்.

 

மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும். நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும், தேஜஸ்திலும் சிறந்தவனாக இருக்கிறான். ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது. இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும்.  

 

பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள்.

 

பூணூலில் மூன்று புரி நூல்கள் இருக்கும்.இவை சிவன், விஷ்னு, பிரம்மாவையும், சக்தி, லஷ்மி, சரஸ்வதியையும் நினைவூட்டுவதாகும். அது மட்டுமல்லாது வேதம் சொல்லுகின்ற மனித குணங்களான சத்வ, ராஜஷ, தாமஸ ஆகிய மூன்று மனித குணங்களையும் ஞாபகப்படுத்துகிறது. முக்காலத்தையும் விழிப்பு, கனவு, அமைதி ஆகிய மூன்று அவஸ்தைகளையும் இது காட்டுகிறது எனலாம். 

 

மேலும் மனிதன் அனுபவித்தே ஆக வேண்டிய இகலோக, பரலோக, அகலோக வாழ்க்கையையும் காட்டுகிறது. மூன்று நூல்களையும் இணைந்து முடிவில் போடுகின்ற முடிச்சிக்கு பிரம்ம முடிச்சி என்று பெயர். மனித உடலில் ஓடும் இடகலை, பின்கலை, சூட்சம நாடிகள் குண்டலினி சக்தியின் இருந்து துவங்குவதையும் பிரம்ம முடிச்சி உருவகமாக காட்டுகிறது. 

 

வேதங்கள் பூணூலை பற்றி ஒன்றும் பேசவில்லை என்றாலும் சில வேத பிரம்மாணங்கள் பூணூலுக்கு ஏக்னோ பவித்ரம் என்று பெயர் கொடுத்து பேசுகின்றன. சூத்ர, வைசிக, சத்ரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் என இந்த பிரம்மானங்கள் வலியுறுத்துகின்றன.

 

கவிதா சரவணன்