tamilnadu epaper

இன்று சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லும் நேரம்

இன்று சித்ரா பவுர்ணமி   கிரிவலம் செல்லும் நேரம்


திருவண்ணாமலை, மே 11–

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியன்று, கிரிவலம் வர உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள, 2,668 அடி உயரமுள்ள மலையையே பக்தர்கள் சிவனாக வழிபட்டு வரும் நிலையில், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

இதில், கார்த்திகை மாத தீப திருவிழா பவுர்ணமி மற்றும் சித்திரை மாத பவுர்ணமி நாட்களில் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் வருவர். சித்திரை மாத பவுர்ணமி திதி இன்று ( 11ம் தேதி) இரவு, 8:48 மணி முதல், நாளை 12ம் தேதி இரவு, 10:44 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.