செய்யாறு மே. 11,
செய்யாறு அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் சித்திரை மாத மகா சனி பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது.
அருள்மிகு பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமாள் முன்பு எழுந்தருளினர் .ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.