ஒரு முறை இராமலிங்க அடிகளாரிடம் பக்தர் ஒருவர்,”ஔவையார்
வேண்டாம் வேண்டாம்” என்று பாடியுள்ளாரே ,தாங்கள் “வேண்டும் வேண்டும் என்று பாட முடியுமா ? “,என்று கேட்டார் .வள்ளலார் அப்போது பாடிய பாடல்தான்
இது .
“ஒருமையுடன் உனது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும் மதி
வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தளமோங்கு கந்தவேளே
தன்முகத் துய்ய மணி உன்முகச் சைவமணி
ஷன்முகத் தெய்வ மணியே “.
1965-66 ல் பதினோராம் வகுப்பில் (SSLC ) தமிழ் பாடப் புத்தகத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இடம் பெற்றிருந்தது.?