tamilnadu epaper

ஈர்க்கும் தாய் மனம்

ஈர்க்கும் தாய் மனம்

ரவிதாஸன் தன் மனைவி பிள்ளைகள் தன் தாய் என காலத்தை நகர்த்த , தன் மனைவி ரேகாவின் பிடிவாதத்தால் தன் தாய் கமலாவை கொண்டு முதியோர் இல்லத்தில் சேர்த்தான் .

 

       மனம் வலித்தாலும் ரவிதாஸன் மனைவிக்காக இதை செய்து விட்டு தாயை வாரம் ஒரு சென்று பார்த்தான் .

 

    எங்கு பார்த்தாலும் கரோனா வைரஸ் தொற்று நிரம்பி வழிய , ரவிதாஸன் ஏரியாவிலும் தொற்று பரவியது .

 

      மனதளவில் அமைதி இல்லாமல் கவலையில் இருந்த ரவிதாஸன் கரோனா வைரஸ் தொற்றில் சிக்கினான் .

 

    மனைவி ரேகாவும் குழந்தைகளும் பாதுகாப்பு கருதி தன் அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்கள் .

 

   ஆறுதல் கூற கூட ஆள் இல்லாத ரவிதாஸன் சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் .

 

     நோயின் தீவிரம் அதிகமானது ரவிதாஸனுக்கு , எப்படியோ செய்தி முதியோர் இல்லத்து ரவிதாஸன் தாய் கமலா காதுக்கு எட்ட , மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்கு வந்துவிட்டாள் .

 

    ரவிதாஸன் கண்ணீர் விட தைரியம் , தன் நம்பிக்கை , ஆதரவு கரம் என தாய் பாசத்தை மட்டும் அல்லாமல் தன் முதுமையை கூட பொருட்படுத்தாமல் தனிமைபடுத்தப்பட்ட ரவிதாஸனுக்கு ஊன்று கோலாக , நம்பிக்கை தூணாக இருந்தாள் தாய் கமலா .

 

    குணமடைந்த மகனை வீட்டுக்கு அழைத்து சென்று ஒரு மாதம் கவனித்து சீராக்கி மறுமகளை வர வழைத்து விட்டு , தன் முதியோர் இல்லம் நோக்கி நடந்தாள் ஆத்ம திருப்தியோடு கமலா ...."

 

    ரவிதாஸன் மனம் மட்டும் அல்ல உடலும் கரைந்தது தாய் மனம் மீண்டும் பிரியும் வேளையில் கனமாக ...."

 

- சீர்காழி. ஆர். சீதாராமன் .