உலகே ஒரு புத்தகம்
தினம் தினம் வாசி
சுவாசிக்க காற்று
வாசிக்க புத்தகம்
அறிவு பொக்கிஷம்
கற்க குறையாத செல்வம்
அழியாத அறிவு
கவின்மிகு சிந்தனை
நேர்கொண்ட பார்வை
திகட்டாத கல்வி
தீரம்மிக்க செயல்
காணக் கிடைத்த கண்டுபிடிப்பு
ஒவ்வொருவரின் ரசனை
அறிவார்ந்த ஆற்றல்
நீ தேட மறந்தால்
தினம் தினம் வாசி
உன் சிந்தனையின் உயிர்
உன் பேச்சின் அழகு
உன்னைக் கண்டு ரசிக்குமே
புத்தகமே புத்தகமே
-ஜா.தமீம்
வந்தவாசி