வாழ வைக்க வந்ததுதான் வாழைத்தண்டு.! தாழயிருந்து தாங்கிப் பிடித்த வாழைத்தண்டு!
சோழநாட்டுக் காவேரி கரைவளர்ந்து.. சொந்தமாகத் திகழுவது
வாழைத்தண்டு.!
உடல்நலத்து குறையகற்றி.. நாம்வாழக் கண்டு..
உளமகிழ்ந்து இலைதந்து பழம்தந்து ஆதரிக்கும் கன்று..
கறியமுது சிறுநீரக கல்நீக்கும் மா மருந்து!
பரிமாறும் இலையினிலே.. செரிமானம் தரும்உணவு அம்மாவாசை விருந்து!
பூ இலை காய் பழம் தண்டு.. பூமிக்கு உழவன் தந்த உவகைமிகு பரிசு! தா என்றே கேட்டப் பேருக்குத் தன்னைத் தந்த தண்டு.! ஆ நிரைகளும் அசைப்போட்டு உண்ணும் வாழைத்தண்டு.! பா வழங்கும் பாவலர்கள் பாடுகின்ற ஓ.. வாழைத்தண்டு.!
-வே.கல்யாண்குமார்